சினிமா   விமர்சனம்
 மகான் கணக்கு

மகான் கணக்கு

கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கடன் வழங்கும் வங்கிகளின் ஆசை வார்த்தைகளால் கடன் வாங்கி அவஸ்தைப்பட்டு தற்கொலை செய்து கொல்லும் குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன், அதனை எதிர்த்து போராடி சரியான சவுக்கடி கொடுத்து ஜெயிப்பதே மகான் கணக்கு.

தன் அக்கா தேவதர்ஷினி குடும்பத்தோடு வசிக்கும் ரமணா படிப்பில் படு கில்லாடி. அதனால் ரமணாவின் மாமா ஸ்ரீநாத் அவனை மேற்கல்வி பயில இரண்டு லட்சம் தனியார் ஒசிஒசிவங்கியில் கடன் வாங்குகிறார். கடனை ஒழுங்காக கட்டி விடும் ஸ்ரீநாத்தை சில காரணங்களை காரணம் காட்டி மேலும் ஒரு லட்சத்திற்கு மேல் பணம் கட்ட வேண்டும் என்று கிடுக்குப்பிடி போடுகிறது. ஸ்ரீநாத்தை பலவிதங்களில் மிரட்டி அவமானப்படுத்தி பணத்தை வாங்கி விடுகிறது ஒசிஒசி வங்கி. அதனால் மனஉலைச்சலுக்கும், அவமானத்திற்கும் ஆளாகும் ஸ்ரீநாத் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமணா  தன் குடும்பத்தை அழித்த ஒசிஒசி வங்கியை பழி தீர்ப்பதற்காக போலி கம்பெனியை ஆரம்பித்து சமார்த்தியமாக பல கோடிகளை சுருட்டி அதனை பல தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கிறார். ரமணாவால் பாதிக்கப்பட்ட ஒசிஒசி வங்கி அவனை தேடி கண்டு பிடிக்க ஒசிஒசி குளோபல் ஹெட் இன்டலிஜின்ஸ் சரவணனை அனுப்புகிறது. சரவணன் ரமணாவை கண்டுபிடித்தாரா? ரமணாவிடமிருந்து பணத்தை மீட்டாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.  
 
ரமணா- எம்பிஏ பட்டதாரியான ஜீவா என்ற கேரக்டரில் அக்கா குடும்பம் அழியக்காரணமான வங்கியை சாணக்யத்தனமாக பழிவாங்கும் ஆக்ரோஷமான ஹீரோவாகவும் அசத்தலாகவும், அம்சமாகவும், அழுத்தமாகவும் நடித்திருக்கிறார் ரமணா. ரமணாவுக்கு இந்தபடம் தமிழ் சினிமாவில் சரியான நிலையான இடத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
 
ரிச்சா சின்ஹா, தேவதர்ஷினி, ஸ்ரீநாத், சரவணசுப்பையா, மனோபாலா, எடிட்டர் சுரேஷ், முத்துக்காளை, சர்மிளா, ஐசக், பேபி கரோலின் கிருத்திகா, உள்ளிட்டவர்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்.
 
ஏகே.ரிஷால் சாயின் இசையும், எஸ்.கார்த்திக்கின் ஒளிப்பதிவின் கைவண்ணமும் வியக்க வைத்து வெற்றிக்கு ஹாட்ஸ் ஆஃப் போட வைக்கிறது.
 
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-சம்பத் ஆறுமுகம். அற்புதமான கதைக்களம், கடன் வாங்கி துன்புறும் குடும்பங்களின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து, தனியார் வங்கிகளின் காட்டுமிராண்டித் தனமான செயலை சுட்டிக்காட்டி ஆசை வார்த்தைகள் கூறி கடன் வழங்கும் வங்கிகளை நம்பாதீர்கள் என்று சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் சம்பத் ஆறுமுகத்திற்கு மனமுவந்த பாராட்டுக்கள்.கடன் வழங்கும் தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பதே படத்தின் மெசேஜ்.
 
அன்னா ஹசாரே இடம் பெறும் க்ளைமாக்ஸ் காட்சியும் பிரமாதம். தயாரிப்பாளர் சூர்யா, பி.சக்திவேல் ஆகியோர் சிறப்பான முயற்சிக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லாம்.
 
மொத்தத்தில் அனைத்து மக்களும் அவசியம் 'மகான் கணக்கு' படத்தை பார்த்து வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
-பேசும் சினிமா விமர்சனக் குழு
-பேசும் சினிமா விமர்சனக் குழுமகான் கணக்கு
 
கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கடன் வழங்கும் வங்கிகளின் ஆசை வார்த்தைகளால் கடன் வாங்கி அவஸ்தைப்பட்டு தற்கொலை செய்து கொல்லும் குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன், அதனை எதிர்த்து போராடி சரியான சவுக்கடி கொடுத்து ஜெயிப்பதே மகான் கணக்கு.
தன் அக்கா தேவதர்ஷினி குடும்பத்தோடு வசிக்கும் ரமணா படிப்பில் படு கில்லாடி. அதனால் ரமணாவின் மாமா ஸ்ரீநாத் அவனை மேற்கல்வி பயில இரண்டு லட்சம் தனியார் ஒசிஒசிவங்கியில் கடன் வாங்குகிறார். கடனை ஒழுங்காக கட்டி விடும் ஸ்ரீநாத்தை சில காரணங்களை காரணம் காட்டி மேலும் ஒரு லட்சத்திற்கு மேல் பணம் கட்ட வேண்டும் என்று கிடுக்குப்பிடி போடுகிறது. ஸ்ரீநாத்தை பலவிதங்களில் மிரட்டி அவமானப்படுத்தி பணத்தை வாங்கி விடுகிறது ஒசிஒசி வங்கி. அதனால் மனஉலைச்சலுக்கும், அவமானத்திற்கும் ஆளாகும் ஸ்ரீநாத் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமணா  தன் குடும்பத்தை அழித்த ஒசிஒசி வங்கியை பழி தீர்ப்பதற்காக போலி கம்பெனியை ஆரம்பித்து சமார்த்தியமாக பல கோடிகளை சுருட்டி அதனை பல தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கிறார். ரமணாவால் பாதிக்கப்பட்ட ஒசிஒசி வங்கி அவனை தேடி கண்டு பிடிக்க ஒசிஒசி குளோபல் ஹெட் இன்டலிஜின்ஸ் சரவணனை அனுப்புகிறது. சரவணன் ரமணாவை கண்டுபிடித்தாரா? ரமணாவிடமிருந்து பணத்தை மீட்டாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.  
ரமணா-எம்பிஏ பட்டதாரியான ஜீவா என்ற கேரக்டரில்  அக்கா குடும்பம் அழியக்காரணமான வங்கியை சாணக்யத்தனமாக பழிவாங்கும் ஆக்ரோஷமான ஹீரோவாகவும் அசத்தலாகவும், அம்சமாகவும், அழுத்தமாகவும் நடித்திருக்கிறார் ரமணா. ரமணாவுக்கு இந்தபடம் தமிழ் சினிமாவில் சரியான நிலையான இடத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
ரிச்சா சின்ஹா, தேவதர்ஷினி, ஸ்ரீநாத், சரவணசுப்பையா, மனோபாலா, எடிட்டர் சுரேஷ், முத்துக்காளை, சர்மிளா, ஐசக், பேபி கரோலின் கிருத்திகா, உள்ளிட்டவர்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்.
ஏகே.ரிஷால் சாயின் இசையும், எஸ்.கார்த்திக்கின் ஒளிப்பதிவின் கைவண்ணமும் வியக்க வைத்து வெற்றிக்கு ஹாட்ஸ் ஆஃப் போட வைக்கிறது.
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-சம்பத் ஆறுமுகம். அற்புதமான கதைக்களம், கடன் வாங்கி துன்புறும் குடும்பங்களின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து, தனியார் வங்கிகளின் காட்டுமிராண்டித் தனமான செயலை சுட்டிக்காட்டி ஆசை வார்த்தைகள் கூறி கடன் வழங்கும் வங்கிகளை நம்பாதீர்கள் என்று சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் சம்பத் ஆறுமுகத்திற்கு மனமுவந்த பாராட்டுக்கள்.கடன் வழங்கும் தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பதே படத்தின் மெசேஜ்.
அன்னா ஹசாரே இடம் பெறும் க்ளைமாக்ஸ் காட்சியும் பிரமாதம்.தயாரிப்பாளர் சூர்யா, பி.சக்திவேல் ஆகியோர் சிறப்பான முயற்சிக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லாம்.
மொத்தத்தில் அனைத்து மக்களும் அவசியம் 'மகான் கணக்கு" படத்தை பார்த்து வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
-பேசும் சினிமா விமர்சனக் குழு

First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்