சினிமா   விமர்சனம்
வேட்டை

வேட்டை

அண்ணன் தம்பி கதையை புதுவிதமாக கமர்ஷியல் மசாலாவுடன் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடி த்ரில்லராக இயக்குனர் லிங்குசாமி தந்திருக்கும் படம் தான் வேட்டை.
பயந்தாங்கொள்ளி மாதவனும் துணிச்சல்கார ஆர்யாவும் அண்ணன் தம்பிகள்.ஒரு விபத்தில் தந்தை இறக்க போலீஸ் வேலை மாதவனுக்கு  கிடைக்கிறது. அந்த வேலையை ஏற்க மறுக்கும் மாதவனை சமாதானம் செய்து வேலைக்கு அனுப்புகிறார் ஆர்யா.ரவுடிகளை அடக்கும் வேலை போலீஸ் அதிகாரி மாதவனுக்கு கொடுக்கப்படும் போது தம்பி ஆர்யா ஆள் மாறாட்டம் செய்து ரவுடிகளை பந்தாடி அண்ணனுக்கு பெருமை சேர்க்கிறார்.  சமீராவை தன் அண்ணனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஆர்யா, பின்னர் சமீராவின் தங்கை அமலாபாலை காதலிக்கிறார். இடையே அண்ணன் தம்பியின் ஆள் மாறாட்ட வேலையை கண்டுபிடிக்கும் ரவுடி கோஷ்டி இவர்களை தீர்த்துக் கட்ட பிளான் போடுகிறார்கள். ரவுடிகளிடமிருந்து மாதவன் ஆர்யா தப்பித்தார்களா? இல்லையா?என்பதே அதிரடி ஆக்ஷன் க்ளைமேக்ஸ்.
ஆர்யா-குருமூர்த்தி என்ற தம்பி கதாபாத்தித்தில் வெட்டி ஆபிசராக, அடிதடியில் அண்ணனுக்கு உதவியாக, கோழையாக இருக்கும் அண்ணனை திருத்தும் பொறுப்புடன் தன் பங்கை கனக்கச்சிதமாக, அமலாவுடன் காதல் விளையாட்டு, அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
மாதவன்-திருமூர்த்தி என்ற அண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவமுடன்,மேலதிகாரி புகழும் போது நேளிவுடன் சமாளிப்பது,  தன் கடமையை  உணர்ந்து துணிச்சலுடன் களம் இறங்கி ரவுடிகளை துவம்சம்  செய்வது என்று தனக்கே உரித்தான காமெடியில் கலக்கியிருக்கிறார்.
சமீரா ரெட்டி-வசந்தி என்ற அண்ணி கேரக்டரில் ஆர்யாவுடன் சண்டை போடுவதிலிருந்து துடிப்பாக பேசி துணிச்சலான  நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
அமலாபால்- ஆர்யாவின் காதலியாக கவர்ச்சி குவியலுடன் ஆட்டம் போடுகிறார்.
மற்றும் அசுதோஷ் ராணா, நாசர், தம்பி ராமையா, ராஜூ ரவிந்திரன், ஸ்ரீஜித் ரவி, முத்துகுமார், சண்முகராஜன் ஆகியோர் டெய்ல்மேட் ரோல்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் வரிகளில் தம்-தம்-தம், பப்பப்ப பப்பபா, தைய தகா தகா என்று இளமை குறும்பு  மெட்டுடன் பாடல்கள் ரசித்து தாளம் போடும் வைக்கும் ரகங்கள்.
ஒளிப்பதிவு-நீரவ்ஷா. கிராமத்து அழகை அள்ளித்தந்து, சண்டைக்காட்சிகளில் பம்பரமாக  சுழன்று படமாக்கியிருக்கும் விதம் அற்புதம்.
இயக்குனர் லிங்குசாமி- ஆக்ஷன் கலந்த கதைக்களத்தை அண்ணன் தம்பி பாசப்பிணைப்புடன், காதல், ரவுடிகளின் மோதல்  என்று சுறுசுறுப்பாக முதல் பாதியிலும், ஆக்ஷன், சென்டிமெண்டுடன்  இறுதியில் தனக்கே உரித்தான பாணியில் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் லிங்குசாமி. காட்சிகள் சில இடங்களில் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் தெளிவான திரைக்கதையால் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்தர போஸ் தயாரிப்பில் உருவான வேட்டை பாசமலர்களின் சேட்டை, வசூல் மழையில் காவல்காரன் கோட்டை.

-பேசும் சினிமா விமர்சனக்குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்