

சினிமா விமர்சனம்
மெரினா
கடற்கரையில் நடக்கும் தினசரி வாழ்க்கைப்போராட்டத்தின் தொகுப்பு தான் மெரினா படத்தின் கதைக்களம்.
அனாதையாக சுற்றித் திரியும் அம்பிகாபதி, கொத்தடிமையிலிருந்து தப்பி வரும் கைலாசம், மகன் செய்கை பிடிக்காமல் வீட்டிலிருந்து ஒடி வந்து மகனை பழி தீர்க்க பிச்சை எடுக்கும் தாத்தா, அன்றாடம் பாட்டுப் பாடி நடனம் ஆடி பிச்சை எடுத்து பிழைக்கும் பாடகரும் அவருடைய மகளும், கடற்கரையில் சவாரி தொழில் செய்யும் குதிரைக்காரன், காதலர்களை வெறுக்கும் பிச்சைக்கார இளைஞன், அனாதை சிறுவர்கள் மேல் பாசம் வைத்திருக்கும் தபால்காரர், தன் மகனை கல்லால் அடித்தசிறுவனை தேடி ஆட்களை அனுப்பும் போலீஸ் அதிகாரி, சிறுவனை தேடும் பொருட்டு சென்னையை சுற்றி கும்மாளமடிக்கும் போலீஸ்காரர்கள், காதலிக்காக ஒவர் பில்டப், செலவுகள் என்று காசை தண்ணீராக இறைத்து பின்னர் வருத்தப்படும் சிவகார்;த்திகேயன், காதலனுடன் எப்பவும் சண்டை, லைட்டா பசிக்குது என்று மீட்டர் போட்டு பின்னர் காதலனை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒவியா, காதல் தத்துவம் சொல்லும் நண்பன் என்று கதாபாத்திரங்கள் தனித்துவமாக, ஒன்றாக இணைந்து கடற்கரையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி யதார்த்தமாக சம்பவங்களை கோர்த்து அழகாக கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
சிவகார்த்திகேயன், ஜெயபிரகாஷ், பசங்க பாண்டியன், கௌதம் புருஷோத், சத்தீஷ், ஜித்தன் மோகன், ஆள்காட்டி ஆறுமுகம், சுந்தர்ராஜன், ஒவியா, ஜெயஸ்ரீ, செந்தில்குமாரி மற்றும் பலர் கடற்கரையில் செதுக்கிய ஒவியங்களாக பளிச்சிடுகிறார்கள்.
அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ்சின் இசையில் நா.முத்துக்குமார் வரிகளில் வணக்கம் சென்னை, மெரினா-மெரினா கோரஸ் சூப்பர் ஹிட் பாடல்களுடன், யுகபாரதி வரிகளில் ஏலேலோ என்ற அதிரடி பாடல் என்று தன் முதல் படத்திலேலே தனிமுத்திரை பதித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு-விஜய். அறிமுக ஒளிப்பதிவிலேயே மெரினாவின் உலகத்தையே தன் காமிராக் கோணங்களில் உணர்வு பூர்வமாக பேச வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
தயாரிப்பு, எழுத்து, இயக்கம்-பாண்டிராஜ். புதுமையான கதைக்களம், சிம்பிளான அனுபவங்கள், சிறுவர்களின் சோகம், சந்N;தாஷம், துக்கம் வெளிப்பாடுகள் என்று ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறார். கடற்கரையில் தன் வீடாக நினைத்து நடக்கும் நிகழ்வுகளுக்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை தெளிவாக ஒரு புது கோணத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சூப்பர், வெரிகுட். வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்களுக்கு படிப்பறிவு கொடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த படத்தின் பஞ்ச் மெசேஜ்.
அனைவரும் பார்க்க வேண்டிய மெரினா ரசிகர்களின் மனதில் என்றும் மறையாத விண்மீன்.
-பேசும் சினிமா விமர்சனக் குழு
- நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ (அமைதிப்படை பார்ட்-2)
- தி க்ரூட்ஸ் 3டி
- அயர்ன் மேன் 3
- சூது கவ்வும்
- எதிர்நீச்சல்
- யாருடா மகேஷ்
- நான் ராஜாவாகப் போகிறேன்
- ஒருவர் மீது இருவர் சாய்ந்து
- திருமதி தமிழ்
- கௌரவம்
- உதயம் என்.ஹெச் .4
- அதிரடி வேட்டை
- கேடி பில்லா கில்லாடி ரங்கா
- கருப்பம்பட்டி
- கண் பேசும் வார்த்தைகள்
- சுண்டாட்டம்
- வத்திக்குச்சி
- பரதேசி
- மறந்தேன் மன்னித்தேன்
- மதில் மேல் பூனை
- நான்காம் பிறை 3 டி
- ஹரிதாஸ்
- வனயுத்தம்
- விஸ்வரூபம்
- ஆடலாம் பாய்ஸ்; சின்னதா டான்ஸ்
- சில்லுனு ஒரு சந்திப்பு
- கண்ணா லட்டு தின்ன ஆசையா
- சமர் விமர்சனம்
- கள்ளத்துப்பாக்கி
- குறும்புக்கார பசங்க

















































