சினிமா   விமர்சனம்
ஒரு நடிகையின் வாக்குமூலம்

ஒரு நடிகையின் வாக்குமூலம்

 

ஒரு நடிகையில் நட்சத்திர வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களும், சோகங்களும் பற்றிய கதை ஒரு நடிகையின் வாக்குமூலம்.
கிராமத்தில் நாடகத்தில் சோனியா அகர்வால் நடிக்கும் போது அவமானப்படுத்தப்பட இதைச் சவாலாக ஏற்றுக் கொண்டு பெரிய நடிகையாக ஆக்குவேன் என்று சபதமெடுக்கிறார் சோனியா அகர்வாலின் தாய். சென்னைக்கு வந்திரங்கும் தாயும், மகளும் படத்தில் சான்ஸ் கிடைக்க என்னவெல்லாம் இழந்தார்கள். சோனியா அகர்வால் எப்படி முன்னணி நடிகையாக வந்து வாழ்க்கையை தொலைத்தார்? என்பதே படத்தின் கதைக்களம்.
சோனியா அகர்வால், ஊர்மிளா, புன்னகை பூ கீதா, யோகி தேவராஜ், இயக்குனர் ராஜ்கபூர், கோவைசரளா, மனோபாலா, கஞ்சா கருப்பு,ஜோதிலட்சுமி, நிக்கோல், சுக்ரன், சதன், கபில், ருக்மணி  ஆகியோர் நெஞ்சங்களை நெகிழ வைக்கும் கேரக்டர்கள் படத்திற்கு பலம் சேர்க்;கிறார்கள்.
ஆதிஷ் இசையிலும், நாக.கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திக்கு உயிர்நாடிகள்.
இயக்குனர் ராஜ்கிருஷ்ணா-முதல் படத்திலேயே துணிச்சலான சப்ஜெக்ட்டை பகிரங்கமாக சொல்லி, கதையை தோய்வில்லாமல், விரசமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் நடிகைகள் வாழும் அவலமான வாழ்க்கையை நச்சென்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா. பாராட்டுக்கள் வெற்றி இயக்குனராக வலம் வர வாழ்த்துக்கள்.
ஒரு நடிகையின் வாக்குமூலம் நடிக்கும் ஆசையில் வரும் இளம் தலைமுறையினருக்கு சாட்டையடி.
-பேசும் சினிமா விமர்சனக் குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்