

சினிமா விமர்சனம்
அம்புலி 3 டி
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண திலிலூட்டும் த்ரில்லர் படம் தான் அம்புலி 3டி.
அமுதன், வேந்தன் கல்லூரி தோழர்கள். கல்லூரி அருகே சோளக்காட்டை தாண்டித்தான் அமுதனின் காதலி இருக்கும் மாடந்திபுரம் ஊர் இருக்கிறது. சோளக்காட்டில் மனிதர்களை தின்னும் அம்புலி இருப்பதால் ஊர் மக்கள் அந்த சோளக்காட்டை கடந்து போக மாட்டார்கள். மாடந்திபுரத்தில் இருக்கும் காதலியை பார்க்க தைரியமாக செல்லும் அமுதனுக்கு அம்புலியின் அண்ணன் செங்கோடன் சோளக்காட்டில் வசிப்பதை பார்க்கிறான். அம்புலியை பற்றியும், அதைத் தேடும் முயற்சியில் நண்பர்கள் இருவரும் இறங்குகிறார்கள். அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? அம்புலியைப் பற்றிய ரகசியத்தை கண்டுபிடித்தார்களா? என்பதே மெய்சிலிர்க்கும் திரில்லிங் க்ளைமேக்ஸ்.
பார்த்திபன், கோகுல், அஜெய், ஸ்ரீஜித், தம்பி ராமய்யா, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன், பாஸ்கி, ஜெகன்னாத், பாலாசிங், கராத்தே ராஜா, அசோகன், கிருஷ்ணசேகர், பாபிஹான்ஸ் பால், சனம், ஜோதிஷா, கலைராணி உமாரியாஸ் ஆகியோர் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் படத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளனர்.
வெங்கட்பிரவுசங்கர், சாம்ஸ்.சிஎஸ், சதீஷ், மெர்வின் சாலமன் ஆகிய நால்வரின் இசையில் அனைத்து பாடல்களுமே இன்றைய காலகட்டத்தில் பழைய மெட்டுக்கள் வைத்து தாளம் போட வைத்திருப்பது ஒரு லவ்லி சமாச்சாரம்.பின்னணி இசை படத்திற்கு உயிர்நாடி பார்ப்பவர்களை உரையச் செய்கிறது.
ஒளிப்பதிவு, ஸ்டீரியோகிராபி-சதீஷ்.ஜி. 1980களில் நடக்கும் திரில்லர் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கச்சிதமாக பொருந்தும் அளவிற்கு ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போன்ற பிரமிப்பு, முக்கால்வாசிப்படம் இருட்டிலேயே சோளக்காடு, இடிந்த வீடு, கல்லூரி வளாகம், கிராமத்தின் அழகு முப்பரிமான காட்சி கோணங்கள் மிரளச் செய்கிறது. பாராட்டுக்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ஹரிசங்கர்-ஹரீஷ் நாராயணன்.இரட்டை இயக்குனர்களின் கைவண்ணம், உழைப்பு, 3டியின் தொழில்நுட்பத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம், சுவாரஸ்யமானகதைக்களம் ஹாலிவுட் படத்திற்கு இணையான விறுவிறுப்பு, அனைத்தும் கச்சிதம். இவர்களின் புது முயற்சி பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது. படத்தை இன்னும் கொஞ்சம் தள்ளி கோடை விடுமுறை நாட்களில் ரிலீஸ் செய்திருந்தால் வசூல் மழை பொழிந்திருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவசியம் பார்க்க வேண்டிய மேஜிக்கல் த்ரில்லர் அம்புலி 3 டி.
-பேசும் சினிமா விமர்சனக் குழு
- நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ (அமைதிப்படை பார்ட்-2)
- தி க்ரூட்ஸ் 3டி
- அயர்ன் மேன் 3
- சூது கவ்வும்
- எதிர்நீச்சல்
- யாருடா மகேஷ்
- நான் ராஜாவாகப் போகிறேன்
- ஒருவர் மீது இருவர் சாய்ந்து
- திருமதி தமிழ்
- கௌரவம்
- உதயம் என்.ஹெச் .4
- அதிரடி வேட்டை
- கேடி பில்லா கில்லாடி ரங்கா
- கருப்பம்பட்டி
- கண் பேசும் வார்த்தைகள்
- சுண்டாட்டம்
- வத்திக்குச்சி
- பரதேசி
- மறந்தேன் மன்னித்தேன்
- மதில் மேல் பூனை
- நான்காம் பிறை 3 டி
- ஹரிதாஸ்
- வனயுத்தம்
- விஸ்வரூபம்
- ஆடலாம் பாய்ஸ்; சின்னதா டான்ஸ்
- சில்லுனு ஒரு சந்திப்பு
- கண்ணா லட்டு தின்ன ஆசையா
- சமர் விமர்சனம்
- கள்ளத்துப்பாக்கி
- குறும்புக்கார பசங்க

















































