சினிமா   விமர்சனம்
முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

 

சைக்கோ காதல் த்ரில்லர் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள்.
 
அதர்வா அம்மா பாசத்தில் வளர்கிறான். அம்மா இறக்க வேலை செய்யும் போது அமலா பாலை சந்தித்து காதல் கொள்கிறான். விபரீதமான காதல் பாசத்தால் சைக்கோவாக மாறும் அதர்வா என்னவாகிறான் என்பதே மீதிக் கதை.
 
அதர்வா முரளி, சந்தானம், நாசர், ஜெயபிரகாஷ், ரவி பிரகாஷ், தருண், நிரஞ்சன், ப்ராஹிம், மாஸ்டர் ஷ{பர்,  மல்லேஷ், அமலா பால், யாஷிகா, அனுபமா, அங்கனா, ஜாவித், கிரன், விஸ்வா மற்றும் பலர் கச்சிதமான கதாபாத்திரங்கள்.
 
தாமரை வரிகளில் ஒ சுனந்தா, ஒரு முறை, யார் அவள் யாரோ, மழை பொழியும் ஆகிய பாடல்கள் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் தாளம் போட வைக்கின்றன.
 
ஒளிப்பதிவு-சக்தி. சூப்பரான லோகேஷன்ஸ், விஷ_வலில் கண்களுக்கு விருந்து படைக்கிறது.
 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-எல்ரெட் குமார். கதைக்களம் புரிந்தாலும், எப்பொழுது ஃபிளாஷ்பேக் வருகிறது என்பதை யூகிக்க சில நேரம் ஆகிறது. சில இடங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் இயக்குனரின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லலாம்.
 
காதலர்களுக்கும், இளைஞர்களுக்கு ஏற்ற படம் முப்பொழுதும் உன் கற்பனைகள்.        
 
-பேசும் சினிமா விமர்சனக் குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்