சினிமா   விமர்சனம்
சேவற்கொடி

சேவற்கொடி

 

சேவற்கொடி
எதிர்பாராத சம்பவங்களால் காரணமே இல்லாமல் இரு இளைஞர்களுக்கும் நடக்கும் மோதலும் சண்டையும் தான் சேவற்கொடி. 
மீன்களை ஏற்றும் வண்டியை ஒட்டும் பவன், பண ஆசையால் தன் முதலாளிக்கு தங்கையை கட்டிக் கொடுக்க வாக்கு கொடுக்கிறான். வேறொருவரை காதலிக்கும் தங்கை காதலனுடன் வீட்டை விட்டு ஒடி விடுகிறாள். இதற்கு  உதவி  செய்தவன் காதலனின் நண்பன்  அருண் பாலாஜி என்று தப்பாக நினைத்து பழி வாங்க துடிக்கிறான். தகுந்த சந்தர்ப்பத்தில் அருண் பாலாஜியின் அம்மாவை வண்டியில் மோதி பவன் கொள்கிறான். இதற்கு காரணமாக இருந்த பவனை  அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறான் அருண் பாலாஜி. இந்த இருவரின் பகை ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் அளவுக்கு செல்கிறது. இறுதியில் யார் வென்றார்கள்? என்பதே படத்தின் முடிவு.
அருண்பாலாஜி, பவன்,பாமா, பிதாமகன் மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சாய்ஜெகன், மணிமாறன், தவசி, கூத்துப்பட்டறை தயாள், பேபி, ஜானகி மற்றும் பலர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் முத்தான பாடல்களில் சி.சத்யாவின் மிரட்டும் இசையும், பி. செல்லத்துரையின் ஒளிப்பதிவும் அதிர வைக்கிறது.
எழுத்து, இயக்கம் இரா.சுப்பிரமணியன்- சிம்பிளான கதைக்களத்தை காதல், மோதலுடன் சொல்லி முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளைக்கு பிறகு சலசலக்க வைக்கிறது என்றாலும் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள். பாடல்கள் படத்தை ஆக்ரமித்திருப்பதை குறைத்திருந்தால் படம் இன்னும் சுறுசுறுப்பாக சென்றிருக்கும்.  
சேவற்கொடி வெற்றியின் முயற்சிக்கு முதல் படி.
-பேசும் சினிமா விமர்சனக்குழு





சேவற்கொடி சேவற்கொடி சேவற்கொடி

First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்