சினிமா   விமர்சனம்
பில்லா II - ஆஸ்கர் ரவிச்சந்திரன் எப்படி பில்லா II மாய வலையில் மாட்டிக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்

பில்லா II - ஆஸ்கர் ரவிச்சந்திரன் எப்படி பில்லா II மாய வலையில் மாட்டிக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்

 

 அஜீத் நடித்து 2007ல் வெளிவந்த பில்லாவின் வாழ்க்கையில் நடந்த முற்பகுதி (ப்ரீக்குவல்) தான் பில்லா II.
 
அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லா பிழைப்பிற்காக வைரக் கடத்தலில் ஆரம்பித்து போதைக்கடத்தல், ஆயுதக் கடத்தல் வரை ஈடுபடுகிறான்.கடத்தல் அதிகரிக்க எதிரிகளும் அதிகமாகிறார்கள். இறுதியாக எதிரிகளை போட்டுத்தள்ளிவிட்டு டேவிட் பில்லா அசைக்க முடியாத டானாக எப்படி உருவாகிறார்? என்பதே க்ளைமேக்ஸ்.-
 
அஜீத்- படம் முழுக்க டேவிட் பில்லாவாக நடித்திருந்தாலும் ஒவர் வன்முறை, சண்டைக் காட்சிகளும், அஜீத் அடிபட்டாலும் உயிரோடு வருகிறார், வில்லன்கள் மட்டும் இறந்து விடுகிறார்கள்  என்று பல இடங்களில் துப்பாக்கி தான் நடித்திருக்கிறது.அவர் நடித்திருக்கும் படங்களிலேயே இவ்வளவு மோசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில்லை. எந்த இடத்திலும் அவருடைய நடிப்பு திறமை வெளிப்படவில்லை. நான் பேச வேண்டியதில்லை படம் பேசும் என்றார் இதுதானோ?
பார்வதி ஒமனக்குட்டன், புருனா அப்துல்லா-விளம்பரம் செய்த அளவுக்கு படத்தில்  சில காட்சிகளில் தலைக்காட்டுகிறார்கள். படத்தின்  மாபெரும் மைனஸ்.
 
வித்யூத் ஜம்வால், சுதான்சுபான்டே- இரு வில்லன்களும் தங்கள் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
 
மற்றும் இளவரசு, மனோஜ் கே ஜெயன், ரஹ்மான்,  ஜானகி சபேஷ்,தினேஷ் லம்பா, கிருஷ்ணகுமார், நந்தா சரவணன், யோக் ஜபீ, ஸ்ரீமன், அசோக் பென்னிவால், தீப்பெட்டி கணேசன், கே.கௌதம், ஜி.வி.பாலா, ரோஹித் குரானா, மதுசூதன்ராவ், விஜய் சன்ஜித், சரத் மன்டவா ஆகியோர் தமிழ் பேசம் அந்நிய முகங்கள் நேர்த்தியான பாத்திரப்படைப்புகள், வெறும் பக்க மேளங்கள்.
நா.முத்துக்குமார் பாடலும் யுவன் ஷங்கர் ராஜா இசையும் ரசிக்க முடியவில்லை.
 
 
கேமிரா-ஆர்.டி.ராஜசேகர். படத்தை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார் இது கண்களுக்கு ஒரு ஆறுதல்.
வசனம்-இரா முருகன், முகம்மத் ஜபார். படத்தின்  ஒட்டத்தை பல இடங்களில் தடுக்கிறது.
 
இயக்கம் -சக்ரி டுலெட்டி. இவருக்கு இரண்டாவது படம்,  இது இரண்டாவது பாகம் இது தான் புதுமை மற்றபடி படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக வன்முறைகள் அதிகம். அதிக பொருட்n;சலவு செய்து மொத்த திரைக்கதையிலும் கவனம் செலுத்தாமல் பல ஓட்டைகளுடன் வலுவான அஸ்திவாரம் இல்லாமல் படத்தை நகர்த்தி ஒவர் பில்டப் செய்து எரிச்சலடைய செய்திருக்கிறார் இயக்குனர்.
 
ஆயுதக் கடத்தலை போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கிடங்கிலிருந்து கடத்துவது நம்பமுடியாதது, பெரிய டான்களையெல்லாம் அசால்டாக சுட்டுக் கொள்வது, நீதிபதியை மிரட்டி தீர்ப்பை மாற்றிக் கொள்வது, அடிபட்டாலும் அஜீத்தைத் தவிர அனைவரும் உயிர் இழப்பது என்று காட்சிக்கு காட்சி லாஜிக் இல்லாமல் பார்த்த காட்சிகளையே பார்க்கும் சளிப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் பில்லா ஐஐ சண்டைக் காட்சிகளிலும், கவர்ச்சியிலும், மேற்கத்திய சாயலில் எடுத்த நம்பமுடியாத தமிழ் படமாக ஒட்டு மொத்த ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் அஜித்.
 
அதிக  எதிர்பார்ப்பில் உருவான பில்லா II அஜித்திற்கு 2012 ஆண்டில் ஒரு சறுக்கல் படமாக, சொதப்பல் படமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டுலெட்டி.
 
ஆஸ்கர் ரவிச்சந்திரன் எப்படி பில்லா II மாய வலையில் மாட்டிக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.
 
-பேசும் சினிமா விமர்சனக் குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்