

விளையாட்டு
ஐரோப்பிய கால்பந்து போட்டி ஸ்பெயின் அணி மீண்டும் சாம்பியன்
கீவ், ஜுலை.3-
14-வது ஐரோப்பிய (ïரோ) கால்பந்து போட்டி ஜுன் 8-ந் தேதி தொடங்கி உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடந்தது. இதில் 16 நாடுகள் கலந்து கொண்டன.
இதன் இறுதிப்போட்டி உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, முன்னாள் சாம்பியன் இத்தாலியை சந்தித்தது.
வழக்கமாக தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியில் புதிய விïகத்துடன் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பலனாக அந்த அணி வீரர்கள் இத்தாலி அணியின் கோல் எல்லையை அடுத்தடுத்து முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்தது. கோல் கம்பத்தின் வலதுபுறத்தில் இருந்து பேப்ரிகஸ் கோலை நோக்கி அடித்த பந்தை டேவிட் சில்வா மின்னல் வேகத்தில் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கினார்.
கோல் விழுந்ததும் பதில் கோல் திருப்பு முனைப்புடன் இத்தாலி வீரர்கள் வேகமாக ஆடினார்கள். ஆனால் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஸ்பெயினின் பின்கள வீரர்களும், கேப்டனும், கோல் கீப்பருமான இகேர் கேசில்லாஸ் சிம்ம சொப்பணமாக விளங்கினார். 16-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஆன்ட்ரீயா பிர்லோ பிரிகிக் மற்றும் கார்னர் வாய்ப்புகளை கோல்கீப்பர் கேசில்லாஸ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். 38-வது நிமிடத்தில் முன்னணி வீரர் பலோடெலி அடுத்த பந்து கோல் கம்பத்தை விட்டு விலகி சென்றது.
41-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 2-வது கோல் அடித்து இத்தாலிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. ஷவி ஹெர்னாண்டோ கொடுத்த அருமையான பாஸ்சை சக வீரர் ஜோர்டி ஆல்பா காலம் தாழ்த்தாமல் சரியாக கோலுக்குள் திணித்தார். அவர் அடித்த முதல் சர்வதேச கோல் இதுவாகும். முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
பின் பாதியில் இத்தாலி அணி வீரர் டி நாதாலே 46-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடிக்க எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது. பின் பாதியில் ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் அதிகம் நிலவியது. 3 மாற்று ஆட்டக்காரர்களை களம் இறக்கிய பின்னர் இத்தாலி வீரர் தியாகோ மோட்டோ காயம் அடைந்து வெளியேறியதால் இத்தாலி அணி கடைசி 25 நிமிடங்கள் 10 வீரர்களுடன் ஆடியது.
84-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 3-வது கோலை போட்டது. மாற்று வீரராக களம் இறங்கிய பெர்னாண்டோ டொரஸ் கோல் கீப்பர் பப்பனை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்தார். 88-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 4-வது கோலை அடித்தது. பெர்னாண்டோ டொரஸ் கொடுத்த பாஸ்சை மாற்று ஆட்டக்காரர் ஜுயன் மதா அபாரமாக அடித்து கோலாக்கினார்.
இத்தாலி அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்து இருந்ததால் இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
முடிவில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை எளிதில் விரட்டியடித்து சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது. ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதும், அந்த நாட்டு ரசிகர்கள் தெருக்களில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததால் இத்தாலி அணியின் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதன் மூலம் ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து 2 முறை ïரோ கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றதுடன் தொடர்ந்து 3 பெரிய போட்டிகளில் (ïரோ 2008, 2010 உலக கோப்பை, 2012 ïரோ) `ஹாட்ரிக்' சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சிறப்பையும் தனதாக்கியது.
- J M Haroon All India Under-17 National League Cricket Tournament from 23rd to 26th April 2013
- Rahul Dravid and Sharmila Tagore launch book on Mansoor Ali Khan Tiger Pataudi
- Mandeep and Tarandeep Seal it for Ranchi Rhinos against Uttar Pradesh Wizards
- சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டிப்சரேவிச்&பாடிஸ்டா
- சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சோம்தேவ் தோல்வி - போபண்ணா ஜோடியும் வெளியேற்றம்
- Tomas Berdych meets tennis fans at Aircel Store
- சென்னை ஓபன் டென்னிஸ்:
- ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் தெண்டுல்கர் அறிவிப்பு
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு
- Aircel Chennai Open 2013
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லட்சுமண் ஓய்வு நிïசிலாந்து தொடருக்கு முன்பே திடீர் முடிவு
- ஐரோப்பிய கால்பந்து போட்டி ஸ்பெயின் அணி மீண்டும் சாம்பியன்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: 12 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சாம்பியன்
- தெண்டுல்கர் 100-100
- உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தியது
- CHINMAYA KHEL MILAN
- 16 வயதில் பயப்படாத தெண்டுல்கர் இப்போதா பயப்படுவார்? அக்தருக்கு, வாசிம் அக்ரம் பதிலடி
- எனது பந்து வீச்சை கண்டு தெண்டுல்கர் நடுங்கினார் - சுயசரிதை புத்தகத்தில் அக்தர் பரபரப்பு தகவல்கள்
- ஒரு கண்ணை தானம் செய்த பட்டோடி
- கண் பார்வை பாதித்தும் கிரிக்கெட்டில் பரிணமித்த பட்டோடி
- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
- இந்திய ஆக்கி கேப்டன் காதல் திருமணம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையை மணக்கிறார்
- ஓய்வு குறித்து டிராவிட் கருத்து
- டன்கன் பிளட்சர் பயிற்சியில் சதம்
- ஐ.பி.எல். கிரிக்கெட் நிதி முறைகேடு: ரவிசாஸ்திரிக்கு சம்மன்
- இங்கிலாந்தை வீழ்த்தும் இந்தியா: கபில்தேவ் நம்பிக்கை
- இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
- 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இஷாந்த் ஷர்மா சாதனை
- 2015 உலகக் கோப்பையில் 14 அணிகள்
- பை ரன்னர் விவகாரம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு காவஸ்கர் எதிர்ப்பு
First << 1 >> Last

















































