

பொது அறிவு
சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி உலக அழகியாக தேர்வு
இறுதிச்சுற்றில் இடம் பிடித்த இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம்
பீஜிங், ஆக.19-
சீனாவை சேர்ந்த 23 வயது இசை மாணவி, உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இறுதிச்சுற்றில் இடம் பிடித்த இந்திய அழகி வான்யா மிஸ்ராவுக்கு சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.
2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.
சீனாவை சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு பெறுவது இது இரண்டாவது முறையாகும். பட்டம் வென்றபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தஇசை மாணவியான வென்ஜியா, வருங்காலத்தில் இசை ஆசிரியையாக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
இந்திய அழகி வான்யா மிஸ்ரா
வேல்ஸ்சின் ஷோபி மோல்ட்ஸ் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெஸிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்தது. கடந்த 2000-வது ஆண்டில் இந்திய அழகி பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றார். அதன்பின் இதுவரை இந்திய அழகிகள் யாரும் இந்த பட்டம் வெல்லவில்லை.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய அழகி வான்யா மிஸ்ரா உலக அழகி பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் அவருக்கு 7-வது இடம்தான் கிடைத்தது.
என்றாலும் வான்யா மிஸ்ராவுக்கு, ஹமிஸ் சோசியல் மீடியா', ஹபிïட்டி வித் எ பர்பஸ்' ஆகிய இரு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்திப்பாடலுக்கு நடனம்
அரை இறுதிப்போட்டியின்போது 1981-ம் ஆண்டு வெளியான "உம்ரோ ஜான்'' என்ற இந்திப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹதில் சீஸ் கியா ஹை' என்ற பாடலுக்கு வான்யா ஆடிய நடனம் மூலம், சிறந்த 7 அழகிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற அழகிகளிடம் "உலக அழகி பட்டத்துக்கு தாங்கள் எந்த விதத்தில் தகுதியானவர்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கனிவான இதயமும் அடக்கமும் நிறைந்த ஒருவர் அடுத்த உலக அழகியாக இருக்கவேண்டும். அவர் எங்கு சென்றாலும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களில் ஒருவராக அவரை கருத வேண்டும்'' என்று இந்திய அழகி வான்யா பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
- Master K.L.Dheeraj Successful Record acheivement On India Book of Records
- உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
- யோக முத்திரைகள்
- சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி உலக அழகியாக தேர்வு
- குடியரசு தலைவர்கள் சில நினைவலைகள்
- உலகின் மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை
- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை கிïரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது- பூமிக்கு படங்களை அனுப்பியது
- சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
- கண்ணுக்கு தெரியாத புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- மைசூர் அரண்மனையின் வயது 100
- தொடரும் பி.எஸ்.எல்.வி. வெற்றி பயணம்
- உலகின் பணக்கார நாடு கத்தார்
- இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை
- மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிக்கு டாக்டர் சரவணனின் அரிய அறுவை சிகிச்சை
- பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு பெண் குழந்தை
- கடாபியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்
- கொல்லப்பட்டார் கடாஃபி
- 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக இருந்த கடாபியின் பரிதாபமான கடைசி நிமிடங்கள்
- மியாட் மருத்துவமனையின் அரிய உலக சாதனை
- 70 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் பொக்கிஷம்
- 89 நாட்டை சேர்ந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக
- திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உதயமாகும் நிகழ்வு
- அமெரிக்காவில் தமிழ்த்தாய் சிலை
- 66வது நினைவு தினம்
- மியாட் ஆஸ்பத்திரியின் செயற்கரியசேவை - உலக ஹெபடைட்டிஸ் பி தினம் 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி - நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார்
- WHO - உலக சுகாதார மையம் - அறிவிக்கும் உலக கல்லீரல் அழற்சி தினம் - ஜூலை 28
- மியாட் ஆஸ்பத்திரி யின் செயற்கரிய சேவை உலக ஹெபடைட்டிஸ் பி தினம்- ஜூலை 31ந் தேதி 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி
- பிரபல பாப் பாடகி மரணம்
- சென்னை சாலைகளில் பவனி வந்த பழைய மாடல் கார்கள் - வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

















































