

முக்கிய செய்திகள்
ஆன்மிக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன நித்தியானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் சூட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது
காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நேற்று காலை கிருஷ்ணகிரி கிருஷ்ணர் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஜகத்குரு சங்கர மடத்திற்கு வந்தார். அங்கு நந்தன வருட பஞ்சாங்க புத்தகத்தை அவர் வெளியிட்டார். இதையடுத்து ஜெயேந்திரர் சுவாமிகள் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக காசி, நேபாளம், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த விராத் நகர், பீகார் பூரி மடம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டேன்.
நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் குடும்பங்களில் கூட ஆன்மிகம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவருகிறது.
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.
இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.
ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.
தமிழக அரசு ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய ஆண்டான நந்தன வருடத்தில் பொதுமக்கள் சகல வசதிகளையும் பெற்று சந்தோஷமாக, ஆனந்தமாக இருப்பார்கள். நந்தனம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் ஆனந்தம் என்று பெயர். அதனால் பொதுமக்கள் நந்தன ஆண்டில் அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள்.
இவ்வாறு ஜெயேந்திரர் கூறினார்.
- Mahindra & Mahindra launched sporty compact sedan Verito Vibe
- Spencer s Retail launches its First Hyper store in Chennai
- A Property Portal to Redefine Online Property Search www.realtycompass.com
- Samsung Group launches its biggest phablet Galaxy Mega at Rs 31,490
- Back and Pain Centre unique medical procedure on foreign patient
- Madras University Vice Chancellor Thandavan presented certificates to the Rank holders of ICAI
- இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்
- நான் தாண்டா
- DSK புரொடக்ஷன் தயாரிக்கும் கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு
- Havells India Launches Industry s first Premium Conventional Switch - Reo
- ஞான கிறுக்கன்
- சிகரம் தொட்ட அகடம்
- தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்
- குகன்
- நயன்தாரா நட்புக்காக பணம் கூட வாங்கமல் எதிர்நீச்சல் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடனம்
- ரசிகர்களே எனது பலம் - தெண்டுல்கர் நெகிழ்ச்சி
- தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்
- அஜீத் ஒரு பவர்புல் எனர்ஜி
- கலைப்பூங்கா 60 ஆண்டு பாரம்பரியம்
- Mega Career Counselling Programme of ICAI on 21st April 2013 for + 2 Students
- INVEST launch -Reliable & Affordable LED lighting solutions
- கீரிப்புள்ள திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டு VCD இல் வெளியிட்டுள்ளனர்
- அஜீத் குமாரின் புதிய படத்தின் துவக்க விழா தள்ளி வைப்பு !!!
- 2 படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜீத்குமாருக்கு அறுவை சிகிச்சை !!!
- G V Prakash in MTV Video and Music Awards, india
- டிவி சேனல்களுக்கு கிடுக்குப்பிடி
- கற்பழித்தால் ஆயுள் முழுவதும் சிறைவாசம் தான்
- 2012-2013 க்கானதேசிய திரைப்பட விருது அறிவிப்பு வழக்கு எண் 18/9,பரதேசி, விஸ்பரூபம் படங்களுக்கு 5 விருதுகள்
- Actor Jeeva pledges support For Earth Hour 2013
- Sony Xperia Z launched in India priced at Rs 38,990

















































