முக்கிய  செய்திகள்
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

 

புதுடெல்லி, ஜுலை.26-
 
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சமையல் கியாசும் சிலிண்டருக்கு ரூ.7 குறைந்தது.
 
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நமது நாட்டில் பெட்ரோல் விலையை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 101 டாலர் அளவுக்கு போனதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 காசு முதல் 91 காசு வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
 
இதன்காரணமாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசு, மும்பையில் 88 காசு, டெல்லியில் 70 காசு, கொல்கத்தாவில் 87 காசு, ஐதராபாத், பெங்களூரில் 91 காசு உயர்ந்தது.
 
இந்த நிலையில், மாநில அரசுகளின் வரி விதிப்பு மாற்றங்களால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முதல் மாற்றி அமைத்துள்ளன.
 
இதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 காசு குறைந்தது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.19 ஆகி உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. கொல்கத்தாவில் ரூ.2.52 உயர்ந்து ரூ.76.13 ஆகவும், மும்பையில் 91 பைசா அதிகரித்து ரூ.75.14 ஆகவும் ஆகி உள்ளது.
 
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 12 காசு குறைக்கப்பட்டு ரூ.43.83 ஆகி இருக்கிறது.
 
டெல்லியில் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கொல்கத்தாவில் 92 காசு உயர்ந்து ரூ.44.66 ஆகவும், மும்பையில் 89 காசு உயர்ந்து ரூ.45.28 ஆகவும் உயர்ந்துள்ளது.
 
இதேபோன்று சமையல் கியாஸ் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் சிலிண்டருக்கு ரூ.7 குறைந்து, ரூ.386.50 ஆகி இருக்கிறது. மராட்டியத்தில் சிலிண்டருக்கு ரூ.9 அதிகரித்து ரூ.423 ஆகி உள்ளது. கொல்கத்தாவில் சிலிண்டருக்கு 4 ரூபாய் குறைந்து ரூ.401 ஆகி உள்ளது. டெல்லியில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
 
தமிழ்நாட்டில் மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 88 காசு உயர்ந்து ரூ.11.46 ஆகி உள்ளது. மும்பையிலும் லிட்டருக்கு 35 காசு அதிகரித்து ரூ.14.73 ஆகி இருக்கிறது. கொல்கத்தாவில் 6 காசு குறைந்து ரூ.14.78 ஆகி உள்ளது. டெல்லியில் மண்எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை.
 
இந்த விலை மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்து விட்டன. 





First   <<  1 2 3 4 5 6 7 8 9 10 11  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்