

முக்கிய செய்திகள்
இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜுலை.26-
சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், `கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரித்து வருகிறோம். படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம்.
இந்த நிலையில், `துப்பாக்கி' என்ற தலைப்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த `கள்ளத்துப்பாக்கி' என்ற தலைப்பின் பின் பகுதியான `துப்பாக்கி' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தடையை நீக்கக்கோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் எதிர்மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜுலை 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
- மனதில் மாயம் செய்தாய்
- Tanishq s Largest jewellery showroom of Anna Nagar now at 2nd Avenue Road
- S.R.பிரபாகரன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
- விரைவில் திரைக்கு வருகிறது சோக்காலி
- ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
- J M Haroon All India Under-17 National League Cricket Tournament from 23rd to 26th April 2013
- தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் சம்பளமும் சலுகையும்
- அஜீத்குமாரின் திரையுலக வாழ்க்கை
- அஜீத்தின் அதிரடி முடிவு
- Gardens by the Bay in Singapore
- Global Hearing Aid opens Chennai centre in Anna Nagar
- Real Value Launches Padmalaya near Siruseri (OMR)
- மலேசிய அமைச்சருடன் கே.பாக்யராஜ் சந்திப்பு
- இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்
- வழக்கு எண் 18/9 படத்துக்கு தேசிய விருது எனது பத்து வருட சினிமா வாழ்க்கையில் இந்த விருது மறக்க முடியாத ஒன்று - டைரக்டர் லிங்குசாமி பேட்டி
- Kerala Tourism s revenues cross Rs. 21,000 crore mark in 2012
- H&R Johnson plans expansion of Dewas unit in Madya Pradesh manufacturing facility
- Aircel launches Kaun Dega Man of the Match Contest with Chennai Super Kings
- Sheltrex - Technology Integrated Cities
- உன்னோடு வாழ்ந்த நாட்கள்
- KALS Distilleries Private Limited Launches KONIGE FUSION Premium Brandy
- ASUS launches its 1st Exclusive Store in Chennai
- India Live 2013 cardiology meeting
- Bosch and Siemens Home Appliances unit in Chennai
- புரட்சித்தலைவி பிறந்த நாள் பரிசாக- பூரண மதுவிலக்கு உடனடி தேவை!
- வாழு வாழ விடு
- Samsung Introduces REX, Global launch of new series of Smart feature phones
- ஏஇயான் சோலார் வீட்டு உபகரண பொருட்கள் அறிமுக விழா
- பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியின் லிம்கா சாதனை
- கண்ணன் என் காதலன்

















































