நேர்கானல்
நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல்

நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல்

 

தமன்னா கதாநாயகியாக நடிக்கும் ஒரு புதிய படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. தமிழ் படத்துக்கு, ஏனென்றால் காதல் என்பேன் என்றும், தெலுங்கு படத்துக்கு, எந்து கண்டி பிரேமனவா என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
 
தேவகோட்டையை சேர்ந்த கருணாகரன் இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இது, இவர் டைரக்டு செய்துள்ள 8-வது படம். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
 
படத்தின் கதாநாயகன் ராம் பேசியதாவது: ஐதராபாத்தில் பிறந்தாலும், படித்தது, வளர்ந்தது சென்னையில்தான். 8 வருடங்களுக்கு முன்பு 'அடையாளம்' என்ற தமிழ் குறும்படத்தில் நடித்து வாய்ப்பு தேடினேன். 
 
'காதல்', 'டிஷ்யூம்' பட வாய்ப்புகள் வந்து கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது. பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறாமல் இருந்தது. 
 
இப்போது இந்தப் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. 
 
தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த கருணாகரன் இயக்கத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 
 
காதல், காமெடி ஆக்ஷன் கலந்த கமர்சியல் படம். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
விழாவில், நடிகை தமன்னா கலந்துகொண்டு தமிழில் பேசி அசத்தினார். அவர் பேசியதாவது:-
 
''நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்பைத்தான் குறிப்பிடுகிறேன்.
 
'பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னை தழுவுகிறது.
 
நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, ''செல்லம்'' என்றுதான் அழைப்பார். அந்த ''செல்லம்'' என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.
 
இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்.''
 
இவ்வாறு தமன்னா பேசினார்.
 
டைரக்டர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.
 
நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார். 





நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல் நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல் நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல் நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல்

First   <<  1 2 3  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்