

நேர்கானல்
ரிசாட்-1 செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றியவர்: கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் வெற்றி உறுதி : தமிழக பெண் விஞ்ஞானி என்.வளர்மதி பேட்டி
சென்னை, ஏப்.27-
கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் வெற்றி உறுதி என்று ரிசாட்-1 செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய தமிழக பெண் விஞ்ஞானி என்.வளர்மதி கூறினார்.
பி.எஸ்.எல்.வி. சி-19 ராக்கெட் ரிசாட்-1' என்ற அதிநவீன செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை தொடர்ந்து, அந்த செயற்கைகோளின் திட்ட இயக்குனராக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி என்.வளர்மதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் அரியலூரில் பிறந்தேன். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் எனது பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர், கோவை என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் மற்றும் கம்ïனிகேஷன் என்ஜினீயரிங் படித்தேன். அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தேன்.
பின்னர், இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தேன். முதலில், திட்ட மேலாளராக இருந்தேன். அதன்பின்னர், துணை திட்ட இயக்குனராக இருந்து, தற்போது திட்ட இயக்குனராக உயர்ந்துள்ளேன்.
இன்றைய நாளில் ஹரிசாட்-1' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத வகையில் புதிய தொழில் நுட்பத்தில் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் சூரிய வெளிச்சத்திலும், மேக மூட்டம் இல்லாதபோதுதான் தெளிவான படங்களை எடுத்து அனுப்பும். ஆனால், ரிசாட்-1 செயற்கைகோள் 24 மணி நேரமும் பகல்-இரவு காலத்தில் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும்.
மேலும், விவசாயிகளுக்கு உதவும் வகையில், மண்ணின் தரம், பயிர் பாதுகாப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிய உதவும். நிலநடுக்கம், பூகம்பம் போன்ற சமயங்களில் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவும்.
இன்றைய நிலையில் ஆணுக்கு பெண் சமமானவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் திறமை உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வேலை செய்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும். எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு வீட்டில் உள்ளவர்களும், உடன் பணியாற்றுபவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
இவ்வாறு விஞ்ஞானி என்.வளர்மதி கூறினார்.
- என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் - அவர்களின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் : ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
- நான் எந்த நடிகரையும் போட்டியாக கருதவில்லை - சிவகார்த்திகேயன்
- ரியல் ஸ்டார் அஜீத்
- எனக்கு இசையில் தான் ஆர்வம் நடிப்பில் இல்லை - டி.இமான்
- ஹன்சிகா - ஒரு மினி பேட்டி
- பாலாவின் நன்றிக்கடன்
- அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்து யானை
- ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கும் ரமேஷ் விநாயகம்
- 121212 பிறந்த நாள் பரிசு!
- புதுச்சேரியில் உருவான ஹாலிவுட் படம் லைப் ஆப் பை
- ஜி.வி.எம். கேரக்டருக்காக எந்த ஆர்டிஸ்ட்டையும் ப்ரஷர் பண்ண மாட்டார் - சமந்தா பேட்டி
- நடிப்பு வெரைட்டியில் ஒரு கலர்ஃபூல் காக்டெய்ல் - ஹீரோ சீயான் விக்ரம்
- மாற்றான் ஒரிஜினல் படம் தான் - சூர்யாவின் அதிரடி பேட்டி
- சினிமாவின் அரிய கலைப்பொக்கிஷ பெட்டகம் ஜி.தனஞ்செயன்
- புத்தகம் படத்தில் கலக்கலான ராக் பாடல்! ஒரே பாடலில் 186 நாட்டு நாணயங்கள்
- காதுகளை, கண்களாக பயன்படுத்தும் பார்வையற்ற மனிதர் தாண்டவம் படத்தில் நடித்தார்
- பாகன் படத்தின் மூலம் அறிமுகமாகிய பெண் பாடலாசிரியர் முருகவேணி
- ஒரு நல்லகுணச்சித்திர நடிகராக பெயரெடுக்கிறதுதான் என் லட்சியம் - டாக்டர். சூரி
- சந்திரா படத்துக்காக ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
- சதம் அடித்து மதன் கார்கி சாதனை
- போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்தேன்
- சிலம்பரசன்-நயன்தாரா மீண்டும் ஜோடி சேருகிறார்கள்
- அமெரிக்கா தந்த அடையாளமும் நரேந்திர மோடி தந்த நற்சான்றிதழும் - நடன இயக்குநர் ஜி.வி.நந்தா
- நான் ராஜாவாகப் போகிறேன் -டைரக்டர் பிரத்வி ராஜ்குமார் பேட்டி
- ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் - அசின்
- கலைஆர்வம் வந்தது எப்படி? இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
- வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன்
- ரித்திகா ஸ்ரீனிவாஸ் - வழக்கு எண் 18/9
- நான் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால், எப்படி நான் மற்ற மொழிகளுக்குள் சென்றிருக்க முடியும்? - சந்தோஷ் சிவன்
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு கோயில்! புரட்சி தலைவி ஜெயலலிதா ஒரு தீபம்!!





















































