நேர்கானல்
ரித்திகா ஸ்ரீனிவாஸ் - வழக்கு எண் 18/9

ரித்திகா ஸ்ரீனிவாஸ் - வழக்கு எண் 18/9

 

ரித்திகா ஸ்ரீனிவாஸ் , வழக்கு எண் 18/9 இல் பள்ளித்தாளாளராகமந்திரிக்கு மிகவும் வேண்டியவராக வரும் இவரைப் பார்த்தவர்கள் யாருடா இது இவ்வளவு அருமையான நடிகை புதுமுகமா , இல்லை வழக்கம் போல வேற்று மாநில வரவா என்று குழம்பித்தான் போவார்கள்.

150 வருடங்களாக மும்பையில் குடியிருக்கும் பச்சைத் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த ரித்திகா ஸ்ரீனிவாஸ். சென்னை எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியின் பொறியியல் பட்டதாரியான ரித்திகா மீடியா தொடர்பான படிப்பில் லண்டனைச் சேர்ந்த பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தொடர்ந்து ஐஸ் பிரேக்கர்ஸ் என்கிற சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து மீடியா சமபந்தமான கலை நிகழ்ச்சிகளை துபாயில் நடத்திக் கொண்டிருப்பவர். கோலிவுட் ஸ்டார்கள் முதல் பாலிவுட் ஸ்டார்கள் என்று ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பட்டாளங்களை அழைத்துச் சென்று அங்கிருக்கும் ரசிகர்களுக்குக் கலை விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி சில முறை தமிழ்த்திரையுலகிலிருந்து சென்றவர்கள் இவரை நடிக்க அழைக்க அதற்கானத் தருணத்திற்காகக் காத்திருந்தவருக்கு வழக்கு எண் 18/9 திரையுலக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

பீரீத்தி, BSA SLR, Chennai Diamonds, Jaisons உட்பட 40 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். வழக்கு எண் 18/9 படத்திற்காக நடிக நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கே சென்று இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர்களிடம் நடித்துக் காண்பித்துக் கொண்டிருந்ததை போகிற போக்கில் பார்த்துச் சென்ற மாத்திரத்திலேயே இயக்குனர் பாலாஜி சக்திவேல் இவரைத் தேர்வு செய்திருக்கிறார். தொடர்ந்து முழு சுதந்திரம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

படம் வெளியாகி இன்று பல்வேறு பல்வேறு படங்களில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும், அழுத்தமான பேசப்படக்கூடிய கதாபாத்திரங்களிலேயே நடிக்க முடிவு செய்திருப்பதால் இன்னும் அடுத்த படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் செய்திருக்கிறீர்களே வீட்டிலும் ரசிகர்கள் மத்தியிலும் எந்த மாதிரி வரவேற்பு இருந்தது என்று கேட்ட பொழுது, “ வீட்டில் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்...குறிப்பாக தமிழ் சினிமாவே பார்த்திராத எனது கணவர் அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப தியேட்டருக்குச் சென்று வழக்கு எண் 18/9 படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மற்றொரு சிறந்த இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் நான் அறிமுகமானதில் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி...

 

ரசிகர்களைப் பொறுத்தவரையில், சென்னையில் நான் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த போது... என்னதான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்... அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு அதில் நடித்திருக்கும் ஒரு நடிகையாக என்னை அடையாளம் கண்டு கொண்டு.... வந்து பாராட்டுகிறார்கள்...





First   <<  1 2 3  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்