

பேசும் சினிமா....பேசுகிறது இன்று புதிதாய் பிறந்தேன்
பத்திரிகை உலகில் மட்டுமல்ல நான் முயன்று துவங்கியவைகள் கோலிவுட் சினிமா உலகில் எதிர் நீச்சல் போட்டு கடும் உழைப்பினால் போராடி மேலே வந்தவன். எனவே அதிர்ஷ்டங்கள் கூட வராது. இலட்ச்pயங்கள் என்றும் தோல்வியடையாது என்பதை உணர்ந்தவன்.அந்த எண்ணத்தில் என்னுடைய முயற்சியில் ஏதாவது ஒரு திட்டம் தோல்விஅடையும் போதெல்லாம் உள்ளம் நொறுங்கி போவது உணர்வேன். அது தான் எனது கடைசி முயற்சி என நினைத்துக் கொள்வேன்.
ஆனால் முடியாது என்பது மூட நம்பிக்கை-முடியுமா என்பது அவநம்பிக்கை-முடியும் என்று நினைப்பது தன்னம்பிக்கை. எனவே முயன்றால் முடியாதது எதுவுமில்லை என சுதாரித்துக் கொண்டு பீனீக்ஸ் பறவை போல் எழுவேன், செயல்படுவேன். எனவே இன்று மீண்டும் புதிதாய் பிறந்தேன்.
இப்போது கலைப்ப+ங்கா குருப் புதிய வரலாற்றுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. பேசும் சினிமா டாட் காம் பெயரில் புதிய இணையதளம். இது ஒரு முக்கியமான எழுச்சி. ஆனால் காலங் கடந்த முயற்சியின் முடிவு. விதைக்க வேண்டிய காலத்தில் விதைக்காமல் விட்டு விட்டு அறுக்க வேண்டிய காலத்தில் அரிவாள் கொண்டு சென்ற கதையாக உள்ளது பேசும் சினிமா டாட் காம் துவக்கம். என்றாலும் வருங்கால கோலிவுட்டில் கோலோச்சப் போகிறது பேசும் சினிமா டாட் காம் இது நிஜம்.
ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், மனித நேய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உலகெங்கும் இருக்கும் மக்களுக்கு தெரிய வைப்பது திரைப்படங்கள் தான்.உலகெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, அந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நம் திரைப்படங்கள் வாயிலாக நம்மைப் பற்றி அறிந்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஊடகமான நமது திரைப்படங்களின் சிந்தனைகளும் கருத்துக்களும் இன்று உலகமெங்கும் வெப்சைட் மூலம் மக்களுக்காக செயல்படுகின்றன.
ஆனால் வெப்சைட்டில் வெளியாகும் நிகழ்ச்சிகள் இரு வகைஉண்டு. ஒன்று கலையில் குழைத்து, யதார்த்தப் படங்களை வியாபாரத்தில் வெற்றிப் பெற செய்து மக்கள் ரசனையிலும், கோலிவுட் பயணத்திலும் புலிப்பாய்ச்சலை ஏற்படுத்தும் வெப்சைட் குழுவின் ஒரு ரகம்.
மந்தமான விசிலடிக்கும் ரசிகனை ஒரு இன்ச் கூட உயர்த்தாமல், அதே பாணியில் வைத்து காக்கும் பெரிய ஹீரோ, நட்சத்திரக் குழுவினர் இன்னொரு ரகம்.
இந்த முரண்பட்ட சூழலில் புதிதாய் பிறந்தேன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் பேசும் சினிமா டாட் காம் எந்த ரகம் இது புது ரகம்.
எனவே உச்ச நட்சத்திரங்கள், இரண்டாம் தர நடிகர்கள், இன்று புது வரவுகளாக ஜொலிக்கும் இளம் நடிகர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் டெக்னிஷீயன்கள் என கோலிவுட் தமிழ் சினிமா உலகில் மக்களும், ரசிகர்களும் போற்றிப் புகழ்ந்து பெருமைப்படுத்தும் இவர்களெல்லாம் மாயக்கண்ணாடி போன்று ஜொலிப்பவர்கள். இவர்களின் நிழல் பிம்பத்தைக் கண்டு மெய் மறந்து ரசிப்பவர்கள், அந்த அளவுக்கு அவர்களது ஆசாபாசங்கள் எல்லாம், இவர்கள் பார்வையும் நெஞ்சில் நிழலாடும் நினைப்பும் பெரும் ஏக்கத்தைக் தரும். இவர்களை எளிதில் நெருங்கி பேச விட முடியாது என்று ஏக்க பெருமூச்சு விடுகின்றனர்.
எனவே நடிகர்களைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களே நாட்டின் மாபெரும் தலைவர்கள்-நட்சத்திர கடவுள்களாக கனவு காண்பதில் அது ரசிகர்களுக்குத்தான் அவமானம்.
எனவே இவர்களது மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும் சினிமா கலைஞர்கள் மாயவலையில் இருந்து மீட்டிட பேசும் சினிமா டாட் காம் முயற்சிக்கும்.
இதனால் நல்ல விதைகள் விதைக்கும் பேசும் சினிமா நல்லவையே முளைக்கும் எனவே பேசும் சினிமா டாட்காம் கொண்ட கொள்கையில் உறுதிபாட்டுடன் செயல்படும். புலி பசித்தாலும் புல்லை தின்னாது. அப்படித் தின்றால் அது புலிக்குத் தான் அவமானம் என்ற வகையில் செயல்படும் பேசும் சினிமா டாட் காம்.
இதன் ழூலம் கோலிவுட் நடிகர்கள், நடிகைகள் நடித்துக்கொணடிருக்கும் படங்கள், மேலும் அவர்கள் பற்றிய தகவல் இந்த பேசும் சினிமா டாட்காம் வெப்சைட்டில் கிடைக்கும்.
எனவே புதிதாய் பிறந்திருக்கும் பேசும் சினிமா டாட் காம் மூலம் ரசிகர்களுக்கு தனி மரியாதையை உருவாக்கித்தர வேண்டியது பேசும் சினிமா டாட் காமின் கடமையாகும். இதற்கான சரியான முடிவை பேசும்சினிமா டாட் காம் தேட வேண்டியிருக்கிறது.
இனி அதற்கான முயற்சியில் புதிதாய் பிறந்திருக்கும் பேசும் சினிமா டாட்காம்; ரசிகர்களை ஈர்க்கக்கூடிய சிந்தனை செய்திடும் வகையில் செயல்படும்.
அன்புடன்
பிரபுஜி.

















































