பாடல் வெளியீடு
முகமூடி

முகமூடி

 

மிஷ்கின் டைரக்ஷனில், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ரோனி ஸ்குரூவாலா, சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் படம், முகமூடி. ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், செல்வா உட்பட பலர் நடிக்கிறார்கள். சத்யா ஒளிப்பதிவு. கே இசை. 
 
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
 
பாடல்களை இளைய தளபதி விஜய் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.
 
பின்னர் இளைய தளபதி விஜய் பேசும்போது, நண்பன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஜீவா எனக்கு நண்பர். மிஷ்கின் படங்களை தொடர்ந்து பார்ப்பேன். அவர் கதை சொல்லும் விதம் அற்புதமாக இருக்கும். ஒரு ரசிகனாக படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.
 
விழாவில், டைரக்டர் மிஷ்கின் பேசியதாவது:-
 
''நான் முதன் முதலாக, உதவி டைரக்டராக வேலை செய்த படம், ஹïத்.' அந்த படத்தின் படப்பிடிப்பின்போது, நான் விஜய்யிடம் பேச மாட்டேன். ஒருநாள் அவர் என் தோளைத்தொட்டு, ஹஹஎன்னிடம் ஏன் பேச மாட்டேன்கிறீர்கள், அண்ணா?'' என்று கேட்டார்.
 
''டைரக்டர் ஆகிவிட்டுத்தான் உங்களிடம் பேசுவேன்'' என்று பதில் சொன்னேன். ஹசித்திரம் பேசுதடி' கதையை அவரை மனதில் வைத்துதான் எழுதினேன்.
 
விஜய் நன்றாக நடனம் ஆடுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ''ஆல்தோட்ட பூபதி'' பாடல் காட்சியை படமாக்கியபோது, விஜய் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த வலியோடு அவர் சிம்ரனுடன் ஆடினார். நான் அவருக்கு, 'ஐஸ்' வைப்பதற்காக இதை சொல்லவில்லை.
 
நடிகர் செல்வா பேசும்போது, 2017-ல் நான் ஹாலிவுட் போய் விடுவேன் என்றார். நான் ஹாலிவுட்டுக்கும் போக மாட்டேன். பாலிவுட்டுக்கும் போக மாட்டேன். அது எனக்கு பெருமை அல்ல.
 
ஜப்பான், ஈரான் படங்களுக்கு எந்த அளவு மரியாதை இருக்கிறதோ, அதை விட அதிக மரியாதை தமிழ் படங்களுக்கு கிடைக்க வேண்டும். உலக அளவில் தமிழ் படங்கள் பேசப்பட வேண்டும். ஹாலிவுட் டைரக்டர்கள், தமிழ் படங்களின் டி.வி.டி. வாங்கிப் பார்க்க வேண்டும். அந்த காலம் வரும்.
 
2017-ல் அது நிச்சயம் நடக்கும். என் உழைப்பு இன்னும் போதாது. இதை விட 100 மடங்கு உழைக்க வேண்டும்.
 
''முகமூடி வரட்டும்...அப்புறம் பார்'' என்று சிலர் பேசுகிறார்கள். முகமூடி வந்தால் ஒண்ணும் ஆகாது. எப்பவும் மாதிரி காலையில் சாப்பிடுவோம். மதியம் சாப்பிடுவோம். இன்னும் அதிக நேரம் டி.வி. பார்ப்போம்.''
 
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
 
நடிகர்கள்  ஜீவா, நரேன், புனித் ராஜ்குமார், செல்வா, நடிகை பூஜா ஹெக்டே, டைரக்டர்கள் லிங்குசாமி, எம்.ராஜா, வெங்கட்பிரபு, கதிர், கண்ணன், ரவி கே.சந்திரன், நந்தினி, பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஞானவேல் ராஜா, எல்ரெட் குமார், கமீலா நாசர், ஒளிப்பதிவாளர் சத்யா, இசையமைப்பாளர் கே, பாடல் ஆசிரியர் கார்க்கி ஆகியோரும் பேசினார்கள்.
 
யு.டி.வி. தனஞ்செயன் வரவேற்று பேசினார்.





முகமூடி முகமூடி முகமூடி முகமூடி

First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்